பலவேளைகளில்
புண்மேல் குற்றும் முள்
புழு மேல் இடப்பட்ட நெருப்பு
பூவுக்குள் அடிக்கின்ற புயல்
காதல்
பலவேளைகளில்
விதண்டாவாதம்
விலையுயர்ந்த சீப்பு
வீணான தேடல்

காதல்
சிலவேளைகளில்
இதயத்தை வருடும் ரோஜா,
அதன் முள் குற்றுகின்றவரை !
அழகாய் வளர்ந்து விட்ட மூங்கில்
அது பூக்கின்றவரை!
பயன்மிக்க மருந்து,
முடிவுத்திகதி முடிவடையும் வரை !