Oct 15, 2010

காதல் பாடல்

விழி பேசும் மொழி காதலே
இரு உடல் மீட்டும் இசை காதலே
இதயங்கள் துடிக்கின்ற ஸ்வரம் காதலே
இரவோடு இருளாகவே நம் உயிரோடு உறவடுமே

மழலை பேசும் கொஞ்சல்
மங்கை இதழ் கெஞ்சல்
மஞ்சள் வானில் மின்னும் மின்னல்
குயிலின் இனிய நாதம்
குருவின் புதிய வேதம்
குவளை மலர் வீசும் நறுமணம் காதலே
மலரோடு மணமாகவே
நம் மனதோடு மழைக்காலமே ..........

சிறகு விரிக்கும் குருவி
சில்லென்ற மலை அருவி
உடம்பில் ஊறும் இன்ப கலவி காதலே
நதியோர நாணல்
நடந்து பழகும் தென்றல்
நாதத்தின் கூடல் இன்பக்காதலே
மலரோடு மணமாகவே
நம் மனதோடு மழைக்காலமே ..............