Jun 12, 2013

http://www.youtube.com/watch?v=fdxyOOhS1Bo&feature=share

 எனது தந்தை வீ . எம் குகராஜாவின் (இலங்கையில் தேசிய விருது வென்ற நாடகாசிரியர்) மகள் என்ற வகையில் என் தந்தையின் மண்ணில் அவரது சிந்தனைகளின் சாரத்தை போல ஒரு அழகிய குறுந்திரைப்படத்தில் நடித்ததையிட்டு பூரிப்போடு இருக்கிறேன்....
இது என் முதலாவது திரைப்படம்......

விதையாய் எனை
விதைத்து
விருட்சமாய்
காணும் முன்னே
கலைந்து .....
காற்றோடு
கரைந்து போன
என் அன்புத்தந்தைக்கு
என் கலைகள் யாவும் சமர்ப்பணம் ....!

May 15, 2013


பனை மரமும் பூத்தாச்சு ....

காற்றெல்லாம் வலைவீசி
கனவெல்லாம் துணை தேடி
காத்திருக்கும் பொழுதுகள்
கத்தியாய் குத்துதடா !

காதலில் கரைந்திருந்து
இருகனிகளாய் இணைந்திருந்த
கருவேலங்காடுகள் இன்று
கருகித்தான் போனதடா!

வயலோடு பசுமைவாங்கி
வனப்போடு வாழ்ந்த நாட்கள்
பனை கொண்ட நிழலாக
சுருங்கித்தான் போனதடா !

ஊர்மெச்ச வாழ்விக்க
உழைப்போடு வருவேனென்று
சொல்லிய வார்த்தைகள்
எதிரொலியாய் கேட்குதடா !
வருடங்கள் பத்தாச்சு
பனைமரமும் பூத்தாச்சு
நீ சொன்ன சொல்லெல்லாம்
காத்தோட போயாச்சு

செம்மணியில் புதைந்தாயோ
வெலிக்கடையில் உறைந்தயோ
புரியாமல் புலம்புகிறேன்
தூது விட மாட்டையோ ?


நவயுகா
(சுடச்சுட ஒரு சூரியன் தொகுப்புக்காக )

Jul 17, 2012


Jun 24, 2012


Jun 8, 2012


Jan 12, 2012

Nov 30, 2010

வேரற்ற விருட்சங்கள்

வடக்கில் மட்டும் சில
வடுக்கள் எஞ்சின !
தெற்கோ வெற்றி வாகை சூடியது !

எங்கும் எதிரொலித்தது
"தீவிரவாதம் ஒழிந்தது"

யுத்தம் முடிகிறது ......
ஊடகங்களில் நேரடி வர்ணனை !
தளபதிகள் கதாநாயகர் பட்டியலில் !

வீதிகள் தோறும்
வெற்றியின் எதிரொலிப்பு !

தேசியக்கொடி விற்போர் பைகள்
முதல் முறையாய் நிரம்பியிருந்தன !

பண்டிகை இல்லை பட்டாசுகள்
விலைப்பட்டன !

வாசல்கள்தோறும் கொடிகளின்
அலங்காரம் !
ஆனால் , அவள் வீட்டில் மட்டும்
அமங்கலத்தின்அடையாளம்!

இனி யுத்தம் நாட்டில் இல்லை
காதல் யுத்தம் அவள் வீட்டிலும் இல்லை !

ஏனெனில் ,
யுத்தம் காவு கொண்டது
வயிற்றுப்பசிக்கு ஆயுதம் தரித்த
அவள் அன்புக்கணவனையல்லவா ?