Oct 14, 2009

சுவாசித்துக்கொண்டிருக்கிறோம்



மழை நம்மை
நனைக்கவே யோசிக்கின்றது......

நிலா நம் முற்றத்தை
மட்டும் தொடுவதேயில்லை......

வசந்தம் நிரந்தரவிடுமுறை
எடுத்துக்கொண்டது....

இருந்தும் நம் சுவாசிக்கின்றோம்
நம் உடல் நீங்கி
உயிர் போகின்றவரை.......

நாம் பட்ட பாடு
நாய் பட்டிருக்காது
காடு நம் வீடானது
நம் வீடு காடானது
இரண்டிலும் வாழ்ந்திருந்தோம்
இரை தேடி அலைந்திருந்தோம் .......


படுக்க பாயில்லை
 உடுக்க உடையில்லை
விலங்கிற்கும் மனிதனுக்கும்
சமத்துவம் பிழையில்லை...... 

 விலங்கியல் கற்றுக்கொண்டோம்
பொருளியல் புரிந்துகொண்டோம்
துப்பாக்கி முழக்கத்தில்
சங்கீதமும் கற்றுக்கொண்டோம்

கண் முன்னே மரணம் கண்டோம்
பட்டினியில் பேச்சிழந்தோம்
ரத்தநதிகள் கடந்து வந்தோம்
செழித்த நம் மண்ணில் செல் வீச்சில்
அங்கமிழந்தோம்

இருந்தும் நாம்
சுவசித்துக்கொண்டிருக்கிறோம்
நம் உடல் நீங்கி
உயிர் போகின்றவரை .........

No comments: